ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஆண்டு ஊதியம் மற்றும் போனசாக ஐயாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயைப் பெறுகிறார்.
ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்சிடம் இருந்து தலைமைச் செயல் அதிகாரி பதவியைப் பத்தாண்டுக்கு முன் டிம் குக் பெற்றார்.
நிறுவனத்தின் இலாபம், பங்கு மதிப்பு உயர்வின் அடிப்படையில் அவருக்கு ஊதியம் கணக்கிடப்படுகிறது. இவரது பதவிக்காலத்தில் ஆப்பிள் பங்கு மதிப்பு 11 மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துள்ளதால் அவர் ஊதியம் மற்றும் போனசாக ஐயாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்புக்கு 50 இலட்சம் பங்குகளைப் பெறுகிறார்.