காபூலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள கர்த்தே பர்வான் என்ற குருதுவாராவில் அவர்கள் அடைக்கலம் புகுந்திருந்த நிலையில் அவர்கள் உயிர் தப்பினர். குண்டு வெடித்த அதே இடத்தில் ஒருநாள் முன்னதாக அவர்கள் நின்றிருந்ததாக குருதுவாரா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கொடூர சம்பவம் ஒருநாள் முன்னதாக நடைபெற்றிருந்தால் இறந்திருப்போம் என்று அவர்கள் அச்சத்துடன் தெரிவித்து இறைவனுக்கு நன்றி கூறினர்.