தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் சான்டியோகோ நகர நெடுஞ்சாலை ஒன்றில் அவசரமாக தரையிறங்கியது. Piper PA-32 என்ற இந்த விமானத்தின் இறக்கையின் பாகங்கள் காணாமல் போனதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த காட்சியை வீடியோ எடுத்த பீட்டர் ஏஞ்சல் என்பவர், தாம் சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது தமக்கு முன்னால் விமானம் தரையில் இறங்கியதை கண்டு வியந்து போனதாக தெரிவித்தார்.விமானம் இறங்கிய போது சாலையில் இருந்த வாகனங்களில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது.