ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதாகவும், பாகிஸ்தான் தங்கள் இரண்டாவது வீடு என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அவர், எல்லைப்புற நாடு என்பதாலும் மதத்தின் அடிப்படையிலும் இருநாட்டு மக்களும் ஒன்றாகக் கலந்துவிட்டதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தங்கள் விவகாரத்தில் அண்டைநாடு எப்போதும் தலையிட்டதில்லை என்றும் தெரிவித்தார். இஸ்லாமை அடிப்படையாகக் கொண்ட, அனைத்து ஆப்கானியர்களையும் உள்ளடக்கிய வலிமையான அரசை அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.