தீவிரவாதத்துக்கு ஆதரவு இல்லாத , அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசுதான் ஆப்கானில் அமைய வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதினுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர், தீவிரவாத இயக்கங்களுடனான உறவை தாலிபான் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனிடையே ஓராயிரம் ஆப்கான் அகதிகளுக்கு இடம் அளிக்கத் தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.