ஒட்டக வகையைச் சேர்ந்த லாமா என்னும் விலங்கின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா கொரோனாவுக்கு எதிரான போரில் உதவுமா என பெல்ஜியத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
பெல்ஜியத்தின் இரு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் லாமாவில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா கொரோனா தொற்றை மட்டுப்படுத்துவதை ஆய்வகச் சோதனையில் கண்டறிந்துள்ளனர். இதை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதித்துப் பார்த்தால்தான் சோதனை வெற்றியடைந்துள்ளதா எனக் கூற முடியும்.
அப்படி வெற்றிபெற்றால் இந்தத் தொழில்நுட்பம் தடுப்பூசிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படாது, ஆனால் தொற்றுப் பாதிப்பால் மருத்துவமனையில் உள்ளோரையும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரையும் பாதுகாக்க உதவும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.