காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கில் ஆப்கான் குடிமக்கள் காத்திருக்கின்றனர்.
அமெரிக்க வீரர்கள் அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகளை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஆப்கானைச் சேர்ந்த எத்தனை பேரை அமெரிக்கா தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் என்பது குறித்து யாருக்கும் எந்த வித தெளிவும் இல்லை. ஏராளமான விமானங்கள் அமெரிக்கர்களையும் ஆப்கான் மக்களையும் ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன.