அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதையடுத்து நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், மூன்றாம் அலை பரவும்போது, சிறார்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுவதாகவும், அதன் காரணமாக பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை என்றும் சவுமியா சுவாமிநாதன் கூறினார்.