ஜப்பானில் உலகின் அதிவேக ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தவர்களுக்கு எலும்புகள் உடைந்ததால் அதன் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ஃபுஜி க்யூ என்ற ரோலர் கோஸ்டர் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோலர் கோஸ்டர் இரண்டு விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 112 மைல் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
இதில் தொடர்ச்சியாக பயணம் செய்தவர்களுக்கு அதன் வேகம் காரணமாக கழுத்து எலும்பு மற்றும் தண்டுவட எலும்புகள் உடைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஃபுஜி க்யூ ரோலர் கோஸ்டர் இயக்கம் நிறுத்தப்பட்டது.