தாலிபன்களிடம் இருந்து தப்பித்து வர முயலும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், அண்டை நாடுகள் தங்களது எல்லைகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என ஐ.நா.அகதிகளுக்கான தூதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய சூழலில் தப்பி வரும் ஆப்கன் மக்களை அகதிகளாக அண்டை நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆப்கானியர்களை மீட்டு வரும் நிலையில், ஆப்கனில் இருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக வந்தால், அண்டை நாடுகளுக்கு உதவ சர்வதேச சமூகம் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஐநாவின் இந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.