கடந்த வாரம் உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றபட்ட பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களை தாலிபன்கள் திரும்பவும் பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காபூலை தாலிபன்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றிய பின்னர் ஒட்டு மொத்த ஆப்கனும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வடக்கில் உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு மாகாண பகுதிகளை ஆயுதம் தாங்கிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அதை தொடர்ந்து பல ராணுவ டிரக்குகளில் அங்கு சென்ற தாலிபன்கள் பானோ, தே சலேஹ், புல் இ ஹெசார் ஆகிய மாவட்டங்களை கைப்பற்றி உள்ளனர்.
ஆனால் அங்கு போர் நடந்து இந்த மாவட்டங்கள் மீட்கப்பட்டனவா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. பஞ்ச்ஷிரில் முன்னாள் சோவியத் எதிர்ப்பு போராளி அகமது ஷா மசூதின் மகன் மசூத் மற்றும் பதவி இழந்த துணை அதிபர் சலேஹ் ஆகியோர் தலைமையில் தாலிபன் எதிர்ப்பு குழுக்கள் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.