சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சாங்கி கடற்படை தளத்தை பார்வையிட்டார்.
அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க போர் கப்பலில் இருந்த வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதே சமயம் சீனா மற்றும் அமெரிக்கா உடனான நட்புணர்வை சிங்கப்பூர் சமநிலையில் வைக்க விரும்புவதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.