தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடனான நட்புறவை வலுப்படுத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமரை திங்கட்கிழமை சந்திக்க உள்ள கமலா ஹாரிஸ் தொடர்ந்து அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பாக விவாதிக்க உள்ளார்.
செவ்வாய் கிழமை அவர் வியட்நாம் செல்லத் திட்டமிட்டுள்ளார். வியட்நாம் செல்லும் முதல் அமெரிக்க துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.