ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு நேர்ந்த அவமானம் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அலபாமா மாநிலத்தில் கல்மேன் என்னுமிடத்தில் பேசிய டிரம்ப், தாலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஜோ பைடன் எடுத்த முடிவே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.
ஜோ பைடன் நிர்வாகம் படைகளைத் திரும்பப் பெற்றது படைவிலக்கம் இல்லை என்றும், அது சரணடைந்ததற்குச் சமமாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். தான் பதவியில் இருந்திருந்தால் தாலிபான்களால் இவ்வளவு விரைவில் நாட்டைக் கைப்பற்றியிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.