அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா கரடிக்கு சீன தூதர் கின் கேங் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வயதான பாண்டா கரடி அழகான குட்டியை ஈன்றது.
அமெரிக்கர்கள் மற்றும் சீனர்களின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்த பாண்டா குட்டிக்கு பூங்கா நிர்வாகம் சார்பில் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.