ஆப்கனில் அமெரிக்க படைகள் விட்டுச் சென்ற ராணுவ தளவாடங்களை தாலிபன்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அவற்றை அழிப்பதற்காக வான்வாழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க மக்களையும் ஆயுதங்களையும் தாயகம் கொண்டு சென்ற பிறகு ஆப்கனில் உள்ள ராணுவ நிலைகளை குண்டு போட்டு அழிக்க வேண்டும், அதன் பிறகே ராணுவத்தினரை திரும்ப அழைக்க வேண்டும் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னர் கூறியிருந்தார்.
அதைப் போன்ற ஒரு நடவடிக்கையை அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய சூழலில், அமெரிக்கா முன்பு வழங்கிய ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்டவற்றை திரும்ப எடுத்துச் செல்ல முடியாத சூழலை தாலிபன்கள் ஏற்படுத்தி உள்ளதால், அவற்றை குண்டு போட்டு அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.