ஆப்கானிஸ்தானில் அரசு ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த ஷப்னம் தவ்ரான் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவரை பெண் என்பதால் வீட்டுக்குச் செல்லுமாறு தாலிபான்கள் கூறியதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் வீடியோ வெளியிட்டு, உதவி கோரியுள்ளார்.
பெண்கள் படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் கூறியிருந்ததை கண்டு சந்தோஷப்பட்டதாகவும், தற்போது யதார்த்தத்தை உணர்ந்து வேதனை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.