ஆப்கானிஸ்தானில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜி 7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானின் சில பகுதிகளில் தாலிபன்களின் வன்முறை தலைவிரித்தாடுவதாக வந்த தகவல்களையடுத்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் ((Dominic Raab )) தலைமையில் ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
வெளிநாட்டவர் மற்றும் ஆப்கானை விட்டு வெளியேற நினைக்கும் குடிமக்களை தடுக்கக் கூடாது என்றும், அரசியல் ரீதியான தீர்வு காணும்படியும் தாலிபன்களுக்கு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.