ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்குள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவிகள் புர்கா அணிந்தபடி பள்ளிக்கு வந்தனர்.
தஜ்ரோபாவாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் மாணவிகள் சுதந்திரமாக நடப்பதும், வகுப்பறையில் அமர்ந்திருப்பதும் போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் பெண்களுக்கு உரிமை உண்டு என்று தாலிபான் தலைவர்கள் உறுதி அளித்துள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.