கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நில நடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 60,000 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், 76,000 கட்டிடங்கள் சேதமடைந்தன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 1,941 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 9,900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.