ஆப்கான் தலைநகர் காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் 600 க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
தலைநகர் காபுலைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் அச்சமடைந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபுல் விமான நிலையம் வந்தடைந்தனர்.
காபுலில் இருந்து கத்தாருக்குப் புறப்பட்ட சி-17 குளோப்மாஸ்டர் 3 விமானத்தில் பெண்கள், குழந்தைகள் என 640 பேர், எவ்வித உடைமைகளும் இன்றி ஆப்கானை விட்டு வெளியேறினர்.