தாலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து அவர்களின் செயல்பாடுகளைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபரின் ஆப்கானிஸ்தானுக்கான பிரதிநிதி சமீர் காபூலோவ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அதில், தாலிபான் அரசின் செயல்பாட்டை ரஷ்ய அரசு உன்னிப்பாகக் கவனிக்கும் என்றும், அதன்பிறகே அந்த அரசை அங்கீகரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.