காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து அதிபர் அஷ்ரப் கனி வெளியேறினார்.
இதையடுத்த சில மணி நேரங்களில் டோலோ நியூஸ் தொலைக்காட்சி அலுவலகத்துக்குத் தாலிபான் படைவீரர்கள் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த நிறுவனத்தின் தற்காப்புக்காக முந்தைய அரசால் வழங்கப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டதாகவும், நிறுவனத்தின் பாதுகாப்புக்கு உறுதியளித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றதாகவும் டோலோ நியூஸ் செய்தி நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.