மலேசிய பிரதமர் Muhyiddin Yassin இன்று பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Muhyiddin Yassin-க்கு வழங்கி வந்த ஆதரவை ஐக்கிய மலேசிய தேசிய அமைப்புக் கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் Muhyiddin Yassin-னின் கட்சி பெரும்பான்மை இழந்தது.
இந்த நிலையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தை அடுத்து மன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் ராஜினாமா கடிதத்தை Muhyiddin Yassin வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்அன்வர் இப்ராகிம் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது