ஆப்கானிஸ்தான் அதிபர் பொறுப்பில் இருந்து பதவி விலகிய அஷ்ரப் கனி அண்டை நாடான தஜிகிஸ்தானுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2 வாரங்களில் 26 மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றியத் தாலிபான்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி தலைநகர் காபுலை கைப்பற்றினர்.
இதையடுத்து அதிபர் மாளிகை சென்ற தாலிபான் பிரதிநிதிகள் வன்முறையின்றி ஆட்சி மாற்றத்தை சாத்தியப்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.