சீனாவில் வலசை மாறி வந்த காட்டு யானைகளின் பாதைகளில் வசித்த ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். யுனான் மாகாண வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால் 14 ஆசிய யானைகள் காடுகளை விட்டு வெளியேறின.
500 கிலோமீட்டர் நடந்தே குன்மிங் நகரை அடைந்த காட்டுயானைகள் மீண்டும் வந்த வழியிலேயேத் திரும்பியுள்ளன. வழியெங்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் மற்றும் கட்டிடங்களை யானைகள் சேதப்படுத்தின.
இருந்தபோதும் சீனாவில் தற்போது 300 காட்டு யானைகள் மட்டுமே உள்ளதால் வனத்துக்கு திரும்பும் வரை யானைகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகளில் 25,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.