சீனாவில் வளர்ச்சி இல்லாத கிராமத்தை தேர்ந்தெடுத்து மிகப் பெரிய அளவில் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு சீனாவின் ஷிங்கிங் அருகே தியான்ஜியாஜாய் என்ற கிராமத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி இந்த பிரமாண்ட பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், சூரியகாந்தி உள்ளிட்ட மலர்களும், 160 கிலோ வரை வளரக்கூடிய பூசணிக்காய், மிகப்பெரிய அளவிலான தர்பூசணி ஆகியவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டுள்ளன.
வறுமையில் வாடிய கிராம மக்களுக்கு வருவாய் ஈட்டி தரும் நோக்கில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை பார்வையிட்ட பொதுமக்கள் தனது மொபைலில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.