ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெயில் சுட்டெரிப்பதால், வீரர்களுக்கு சவால் அதிகரித்துள்ளது.
நாளை மறுதினத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் நிலையில், டோக்கியோவில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாவதால் வீரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, டோக்கியோவில் ஒலிம்பிக் நிறைவு விழாவின் போது கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், முன்னேற்பாடுடன் தயாராக இருப்பதாகவும் ஒலிம்பிக்கின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.