நைஜீரியாவில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற 22 பில்லியன் மதிப்பிலான யானை தந்தங்கள், எறும்புண்ணி மற்றும் அதன் செதில்களை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சீன மருத்துவத்தில், கூச்சம் சுபாவம் கொண்ட எறும்புண்ணியின் செதில்கள் பயன்படுத்தப்படுவதால் அவைகள் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன.
எனவே, பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் ஜெர்மன் அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து சுங்கச்சாவடி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை நைஜீரியா அரசு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு மையமாக நைஜீரியா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.