மேற்கு துருக்கியின் அஜியன் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அங்கு அமைந்துள்ள அனல் மின்நிலைத்துக்குள் பரவியுள்ளது. இதனால் மின்நிலைய வளாகத்துக்குள் வைக்கப்பட்டுள்ள நிலக்கரியில் தீ பற்றினால் ஏற்படும் அபாயம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்நிலையத்தில் இருக்கும் எளிதில் தீபற்றக்கூடிய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் , அதிக வெப்பம் மற்றும் பலமாக வீசும் காற்றின் காரணமாக கட்டுக்கடங்காமல் தீ எரிந்து வருவதால்,ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி சென்ற வாரம் முதல் 8 பேர் பலியாகியுள்ளனர்.