செக் குடியரசில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
ஜெர்மனியின் முனிச் (Munich) நகரில் இருந்து பிராக் (Prague) நோக்கி விரைந்த சர்வதேச ரயில் சிக்னலுக்கு நிற்காமல் சென்றதால் எதிரே வந்த பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. விபத்தில் படுகாயமடந்த 8 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.