ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தை குறி வைத்து தாலிபான்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து தாலிபான்களின் கை ஓங்கியுள்ளது.
பெரும்பாலான கிராமங்களைக் கைப்பற்றியத் தாலிபான்கள் தற்போது லஷ்கர் கஹ் , காந்தஹார், ஹீரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைத் தடுக்க ஆப்கான் படைகள் வான் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
காந்தஹார் விமான நிலையத்தை மையமாகக் கொண்டு வான் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதால் அதிகாலை விமான நிலையத்தின் மீது தாலிபான்கள் 3 ஏவுகணைகளை வீசினர். அதில் 2 ஏவுகணைகள் ஓடுபாதையில் விழுந்து வெடித்தன. ஓடுபாதை சேதமடைந்ததால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.