கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு பரவுவதாக எச்சரித்துள்ள பிரதமர் யோஷிஹிடே, அத்தியாவசியமற்ற, அவசரமற்ற காரணங்களுக்காக வெளியே செல்வதையோ அல்லது பயணம் செய்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவை சுற்றியுள்ள மேலும் சில நகரங்களில் அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.