சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5 மாகாணங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான ஊரடங்கு விதிகளால் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக சீனா தெரிவித்திருந்த நிலையில், சில மாதங்களில் இல்லாத அளவிற்கு இப்போது கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாற்றம் பெற்ற டெல்டா வகை கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், சீன தலைநகர் பீஜிங் மற்றும் ஐந்து மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.