சீனாவில் அலிபாபா உள்பட 3 ஐடி நிறுவனங்களின் பங்குகள் இரண்டு நாட்களில் கடும் வீழ்ச்சி அடைந்ததால், பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளன. மொபைல் ஆப் மூலம் உணவு டெலிவரி செய்து வரும் Meituan என்ற நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
இந்த நிறுவனத்திற்கு அரசு தரப்பில் இருந்து புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டதால், கடந்த 3 நாட்களில் மட்டும் 6200 கோடி டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதே போன்று Tencent என்ற ஐடி நிறுவனத்தின் பங்குகள் விலையும் தாறுமாறாக வீழ்ச்சி அடைந்ததால், 10 ஆயிரம் கோடி டாலருக்கு மேல் சந்தை மதிப்பு குறைந்துள்ளது.
அலிபாபா நிறுவனத்தின் பங்குகளும் இரு நாட்களில் 10 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது. 3 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 23 ஆயிரத்து 700 கோடி டாலருக்கு மேல் வீழ்ச்சி அடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.