கடந்த மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது ஆர்க்டிக் துருவப் பகுதியின் மீது படர்ந்த சந்திரனின் நிழலின் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 10ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை, விண்வெளி காலநிலை கண்காணிப்பு செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருந்த EPIC எனப்படும் எர்த் பாலிக்ரோமேட்டிக் இமேஜிங் கேமரா மூலம் நாசா படம் பிடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது அதன் நிழலின் கடைசிப் பகுதி ஆர்க்டிக் துருவப் பகுதியில் புள்ளியாய் விழுந்தது.
இதனை நாசாவின் EPIC கேமரா துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. EPIC கேமரா பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல் தொலைவில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.