அண்மையில் விண்வெளி சென்று திரும்பிய பிரிட்டன் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் அமேசன் நிறுவன முன்னாள் தலைவர் ஜெஃப் பெசோஸை விண்வெளி வீரர்கள் என அழைக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
விமான நிர்வாகக் கூட்டமைப்பின் விதிமுறை படி விண்வெளி வீரர் என அழைக்கப்பட, ஒருவர் பூமிக்கு மேல் 80 கிலோமீட்டர் பயணித்திருக்க வேண்டும். அதனை இருவரும் நிறைவு செய்த போதும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விதிமுறையின்படி, விண்வெளி வீரர் என பெயர் பெற விண்கலத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள ஏதேனும் பங்களிப்பு அளித்திருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தானியங்கி விண்கலத்தில் விண்வெளி சென்ற ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சனை விண்வெளி வீரர்கள் என அழைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி செல்ல கோடிக்கணக்கில் செலவிட்டு டிக்கெட்களை முன்பதிவு செய்த ஏராளமான தொழிலதிபர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.