இந்த ஆண்டின் குளிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா தொற்று உருவாக வாய்ப்புள்ளதாக பிரெஞ்சு அரசின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு அரசின் அறிவியல் கவுன்சில் தலைவரான ஜீன் பிராங்காயிஸ் டெல்பிரைசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.
அதில் இந்த ஆண்டின் குளிர்காலத்தில் புதிய உருமாறிய கொரோனா தொற்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் புதிய தொற்று மிக ஆபத்தானதா? என்றோ, அதன் விளைவுகள் குறித்தோ முன்கூட்டிக் கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டோ, அதற்கடுத்த ஆண்டோ இயல்புநிலை திரும்ப வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.