சீன அதிபர் என்ற முறையில் ஷி ஜின்பிங் திபெத்திற்கு முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரமான லாசாவுக்கு (Lhasa ) அவர் வியாழக்கிழமை வந்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது வருகையை ஒட்டி அங்கு மக்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திபெத்தை ஆக்கிரமித்து தனது தன்னாட்சி பிரதேசமாக மாற்றிய சீனா அங்கு ராணுவத்தை குவித்து, திபெத்தின் இன அழிப்புக்கான நடவடிக்களில் இறங்கி உள்ளதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் திபெத் மீதான தனது கட்டுப்பாட்டை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் ஷி ஜின்பிங்கின் இந்த பயணம் இருந்ததாக கூறப்படுகிறது.