அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் அரியவகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
ஒரேகானின் வடமேற்குப் பகுதியில் உள்ள சன்செட் கடற்கரையில் ஒதுங்கிய ஓபா (Opah) வகையை சேர்ந்த இந்த மீன், மூன்ஃபிஷ் (moonfish) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆரஞ்ச் மற்றும் சில்வர் நிறத்தில் 3.5 அடி நீளமும், 45 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை கடற்கரையில் இருந்து மீன்வளத்துறை ஊழியர்கள் மீட்ட நிலையில், கொலம்பியா ரிவர் மெரிடைம் மியூசியம் (Columbia River Maritime Museum) என்ற உள்ளூர் அமைப்பு மூலம் சில நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.