ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த அதி நவீன போர் விமானத்தை ரஷ்யா தயாரித்துள்ளது.
செக்மேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானத்தை சுகோய் நிறுவனம் தயாரித்துள்ளது. எடைகுறைந்த ஒற்றை என்ஜின் கொண்ட செக்மேட் விமானம் தங்களது மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு என்றும் 7 டன் அளவிற்கு போர் கருவிகளை எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது என்றும் சுகோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோ அருகே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செக்மேட் விமானத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார். இந்த விமானத்தை 2026ம் ஆண்டு முதல் கேட்கும் நாடுகளுக்கு விற்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.