ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல்-ல் (Kabul), அதிபர் அஷ்ரஃப் கானி (Ashraf Ghani) தலைமையில் நடந்த பக்ரீத் கூட்டு தொழுகையில், ராக்கெட் குண்டுகள் வெடித்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் மாளிகையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்துகொண்டு இருக்கும்போது, திடீர் என்று, அடுத்தடுத்து மூன்று ராக்கெட் குண்டுகள் மாளிகைக்கு அருகே விழுந்து வெடித்தது. அதிர்ந்து போன தொழுகையாளர்கள் சற்று சலசலப்புக்கு பிறகு தொடர்ந்து
தொழுகையில் ஈடுப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சொன்ன அதிபர் மாளிகை அதிகாரிகள், தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை என்று தெரிவித்தனர்.