செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

விண்வெளி சுற்றுலா ஜெப் பெசோஸ் முயற்சி சாத்தியமானது.!

Jul 20, 2021 09:58:36 PM

குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா திட்டத்தை முன்னெடுக்கும், அமேசான் நிறுவன முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிப் பயண முயற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஏவுதளத்தில் இருந்து New Shepherd விண்கலம் மூலம் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்கு சென்றார். உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்துவதற்காக புளூ ஆர்ஜின் (Blue Origin) நிறுவனத்தை தொடங்கினார்.  கடந்த 9 நாட்களுக்கு முன், பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் விண்ணில் 86 கிலோமீட்டர் பயணித்து சாதனை படைத்தார். 

அதனை முறியடிக்கும் விதமாக ஜெப் பெசோஸ் (Jeff Bezos) தனது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஒருவனுடன் 106 கிலோமீட்டர் விண் பயணத்துக்குத் தயாரானார். மணிக்கு 3,595 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட், விமானிகள் தயவின்றி தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீள New Shepherd விண்கலத்தை 105 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்திவிட்டு பூமிக்குத் திரும்பியது.

அங்கிருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் உயரம் பயணித்த விண்கலம் பின்னர் ராட்சத பாராசூட்டின் உதவியுடன் பூமியில் தரை இறங்கியது. 

10 நிமிடங்கள் 10 வினாடிகள் நீடித்த விண்பயனத்தை நிறைவு செய்து விட்டு பூமிக்குத் திரும்பிய ஜெப் பெசோஸை (Jeff Bezos) அவரது உறவினர்களும், ஊழியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். 

விண்கலத்தை ஏவி விட்டு வெடித்து சிதறாமல் ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி விடுவதால் பெரும் பணச் செலவு தவிர்க்கப்படுவதுடன் வரும் காலங்களில் குறைந்த கட்டணத்தில் விண் பயணம் சாத்தியமாகியுள்ளது.


Advertisement
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..
தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்
அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்
அமெரிக்கா கலிபோர்னியாவில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ
உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சு நடத்தத் தயார் - ரஷ்ய அதிபர் புதின்
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார் - நாசா விளக்கம்
அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் - ஜோ பைடன்
பாகிஸ்தானில் மாசுபாட்டைச் சமாளிக்க ஸ்மாக் வார் ரூம் திறப்பு ..!
வரலாற்றில் முதல்முறையாக அல்-ஜாவ்ப் பகுதியில் பனிப்பொழிவு.!

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement