ஜப்பான் நாட்டு கோழி பண்ணைகளில் கோழிகள் நெருக்கி பிடித்து கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூண்டுக்குள் இருந்தபடி வினோத கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.எஸ்.இ புட்ஸ் (ISE Foods) என்ற முன்னனி முட்டை உற்பத்தி நிறுவனத்தில் போதிய இடவசதி இல்லாத சிறிய கூண்டுகளில் கோழிகள் அடைக்கப்பட்டுள்ள காணொளியை பீட்டா அமைப்பு வெளியிட்டது.
இது கோழியின் ஆயுட்காலத்தை குறைக்கும் என்பதால் விலங்கு நல ஆர்வலர்கள் இதனை கண்டித்து முட்டைகள் சாப்பிட வேண்டாம் என முழக்கங்கள் எழுப்பினர்.