ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான Estonia - வில் நடைபெற்ற அதி வேக கார் பந்தயத்தில் பின்லாந்து வீரர் Kalle Rovanpera முதன்மை இடத்தை பிடித்துள்ளார். இப்போட்டியின் 13- வது சுற்றில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் , விண்ணில்ராக்கெட் சீறிப்பாய்வது போல, கரடு - முரடான தரையில் மின்னல் வேகத்தை கார்களை செலுத்தினர்.
கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்தான இந்த போட்டியில் இளம் வீரர் Rovanpera மிக குறுகிய நேரத்திற்கு ள் இலக்கை எட்டி, முத்திரையை பதிவு செய்தார். மொத்தம் 24 சுற்றுகள் கொண்ட இந்த போட்டித் தொடரில் ஒட்டுமொத்தமாக பிரெஞ்சு வீரர் Sebastien Ogier முன்னிலை வகிக்கிறார்.