அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தக் கோரி, நியூலாந்தில் விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டுக்களான வாகனங்களில் பேரணி நடத்தினர்.
நாடுதழுவிய அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தால், பல்வேறு நகரங்களின் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்களும், விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நின்றனர்.