அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
வறட்சி நிலவும் அமெரிக்காவின் தென் மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட பல காட்டுத் தீக்களில் இது மிகவும் பெரியதாக உள்ளது. கடந்த 6 ஆம் தேதி Fremont-Winema தேசிய வனப்பகுதியை சுற்றி பற்றிய இந்த காட்டுத்தீயால் ஏற்கனவே 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் காடு சாம்பலாக மாறி விட்டது.
தீயணைப்பு பணியில் ஆயிரக்கணக்கான வனவிலங்குகளை காப்பாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. வனப்பகுதியை ஒட்டி வசித்த சுமார் 2 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் மீட்புக் குழுவினர் பெரும்பாடு பட்டனர்.