சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியுள்ளது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் சீன அரசால் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட உய்குர் இன மக்களின் கட்டாய உழைப்பால் உருவாக்கப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.
இந்நிலையில் செனட் சபையில், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா அதிபர் பைடனின் ஒப்புதலுக்கு பின் சட்டமாக இயற்றப்படும்.