மலேசியாவில் கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றும் 200 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அங்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
செலங்கோர் (SELANGOR) மாகாணத்தில் உள்ள பிரமாண்ட தடுப்பூசி மையத்தில் தினமும் 3000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அங்கு பணியாற்றிய 453 ஊழியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது 200 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுத்திகரிப்பு பணிகளுக்காகத் தடுப்பூசி மையம் மூடப்பட்டது.