ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
நசிரியா (Nassiriya) நகரில் உள்ள மருத்துவமனையின் கொரோனா வார்டில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 64 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.